தனியார் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - அகில இலங்கை தனியார் பஸ் சங்கம்

By Digital Desk 5

07 May, 2022 | 09:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. 

தூரபிரதேச போக்குவரத்தினை இன்றும் நாளையும் மாத்திரமே முன்னெடுக்க முடியும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்

கொழும்பில் வௌ்ளிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது குறுகிய தூர போக்குவரத்து சேவைக்காக தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்படும்,தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவை இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.

தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கான எரிபொருள் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

எதிர்வரும் நாட்களில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையலாம்.

எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எதிர்வரும் மாதம் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது. தனியார் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23