உலகிலேயே மிகவும் நீளமான 490 அடி அதாவது 150 மீற்றர் நீளம் கொண்ட கண்ணாடியால் ஆன பாலம் வியட்நாமில் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தால் சுமார் 450 பேர் வரையிலும் தாங்கும் திறன் கொண்டதாகும். 

இந்த பாலம் இரண்டு மலைகளுக்கு நடுவே சுமார் 2 ஆயிரத்து 73 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் உள்ள சோனா லா என்ற மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதை நிர்மாணித்த நிறுவனம், உலகிலேயே மிகவும் நீளமான கண்ணாடி பாலம் என தெரிவித்துள்ளது.

இந்த கண்ணாடி பாலத்தில் முதன் முறையாக நுழையும் எவரும் மெலிதாக நெர்வஸ் ஆவது வழக்கம். பின்னர் படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்துவிடுவர் என்கின்றனர் இதன் அழகில் மயங்கிய சுற்றுலா பயணிகள். 

இது முற்றிலும் பாதுகாப்பான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து இரு மலைகளின் நடுவில் உள்ள பள்ளதாக்கை ரசிப்பது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருக்கும். 

உலகிலேயே மிகவும் நீளமான கண்ணாடி பாலம் இதுதானா என்பதை கின்னஸ் ரிக்கார்ட்ஸ் அடுத்த மாதம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த பாலத்துக்கு பாக் லாங் என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது அதற்கு வெள்ளை டிராகன் என பொருள்.