(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஜனநாயகமானது, அமைதியானது என நீதிமன்றம் பல முறை உறுதிப்படுத்தியுள்ளது.
எக்காரணத்திற்காக அவரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்கள் அறிவிக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஜனாதிபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும் இல்லாவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
சர்வாதிகார ஆட்சியாளர்களின் இறுதி நிலைமை என்னவாயிற்று என்பதை ஜனாதிபதி மீட்டுப்பார்க்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
ஜனாதிபதி தனது பதவியை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் உட்பட அமைச்சரவையை பதவி விலக்க தீர்மானித்துள்ளார்.
நாட்டு மக்கள் தன்னை பதவி விலகுமாறு தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் வலியுறுத்தி வருவதை ஜனாதிபதி அறியாமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஜனநாயகமானது,அமைதியானது என நீதிமன்றம் பலமுறை அறிவித்துள்ள நிலையில் மக்களின் ஜனநாயக போராட்டத்தை முடக்க அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வியாழக்கிழமை (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 2 ஆம் திகதி எவ்வித காரணமுமின்றி அவசரகால சட்டமும்,3ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்து ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதை நாட்டு மக்கள் மதிக்கவில்லை.
அவசரகால சட்டம் ஏன் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து ஜனாதிபதி முதலில் தெரிந்தவர்களிடம் கேட்டு விளங்கிக்கொள்ள வேண்டும்.
எக்காரணத்திற்காக அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி இராணுவத்தினரது பாதுகாப்புடன் பதுங்கு குழியில் ஒலிந்துக்கொண்டு மக்களின் ஜனநாயக போராட்டத்தை முடக்க முயற்சித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
சர்வாதிகார ஆட்சியாளர்களின் இறுதி நிலைமை என்னவாயிற்று என்பதை ஜனாதிபதி மீட்டிப்பார்க்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM