இந்தியாவில் முதன்முறையாக இருபதிற்கும் மேற்பட்ட மூத்த முன்னாள் உதைபந்தாட்ட வீரர்கள் பங்குபற்றி நடித்திருக்கும் 'போலாமா ஊர்கோலம்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ' போலாமா ஊர்கோலம்'.

 அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார். 

இவர்களுடன் மதுசூதன், ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபீக் ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட முன்னாள் உதைப் பந்தாட்ட வீரர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். 

வைசாலி சுப்பிரமணியன், டேவிட் பாஸ்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். 

பின்னணி இசையை கே. எம். ரயான் மேற்கொண்டிருக்கிறார். 

இப்படத்தின் இசை மற்றும் முனனோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் பேசுகையில், “போலாமா ஊர்கோலம்' என் நண்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி திரைக்கதையாக எழுதி உருவாக்கி இருக்கிறேன்.

 இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு எந்த இடத்திலும் சோர்வு தராது. இரண்டு மணி நேரம் ஓடும் கிளாசிக்கல் வித் கமர்சியல் படைப்பாக உருவாகி இருக்கிறது. 

படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது ஃபீல் குட் மூவியாக இருக்கும். '' என்றார்