அட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலபிட்டி பகுதியில் பஸ்ஸொன்றுடன்  லொறி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 தம்புளையிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸில் நாவலபிட்டியவிலிருந்து கம்பளை நோக்கிச் சென்ற லொறியே மோதுண்டு விபத்துக்குளானது.

 விபத்தில் பஸ் சாரதி காயமுற்று நாவலபிட்டிய ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நாவலபிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

- Logesh