பிரதமரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய கோரிக்கை :  மஹிந்தவும் இணக்கம் 

Published By: Digital Desk 4

06 May, 2022 | 09:31 PM
image

ரொபட் அன்டனி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கிறார். 

நீதி அமைச்சரும் பதவி விலகினார்!! - தமிழ்நாடி.com

இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.  

அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை  அவர் இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஜனாதிபதி கோட்டாபய தலைமையில்  நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்திலேயே  இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சிலரும் ஜனாதிபதியின் கோரிக்கையை ஆதரித்துள்ளனர்.

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் நாடு முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.  அத்துடன் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த ஆர்ப்பாட்டங்களை கலைக்க கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த சூழலிலேயே இன்றைய தினம் அவசரமாக விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையில் நடைபெற்றது. 

 இந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதாவது தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இடைக்கால அரசாங்கம் அமைப்பது  போன்ற விடயங்கள்  குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

 இந்நிலையில்  நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ பிரதமரிடம்  வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  அந்த வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் திங்கட்கிழமை பெரும்பாலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

அதன் அடிப்படையில் விரைவில் சகல கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் புதிய பிரதமரின் தலைமையில் இந்த இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாத காலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகவேண்டும்  என்றும் கோரி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து மகா சங்கத்தினரும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  அத்துடன் எதிர்க்கட்சிகளும்  ஆளுங்கட்சியில் இருக்கின்ற சுயாதீன தரப்பினரும் இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.  இந்த நிலையிலேயே தற்போது பிரதமர் பதவி விலக தீர்மானித்தள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்!

2025-02-13 17:39:48
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-13 16:25:44