6 மாதங்களின் பின்னர் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய 4 விண்வெளிவீரர்கள்

By T Yuwaraj

06 May, 2022 | 08:11 PM
image

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களின் பின்னர்நான்கு விண்வெளிவீரர்கள் சகிதம் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது.

No description available.

அமெரிக்க நாசா விண்வெளி வீரர்களான தோமஸ் மார்ஷ்பேர்ன், ராஜா சாரி, கேலா பாரொன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தைச் சேர்ந்த ஜேர்மனிய விண்வெளி வீரரான மத்தியஸ் மோரர் சகிதம் மேற்படி விணகலம் அமெரிக்கப் புளோரிடா மாநில கடற்கரைக்கு அப்பாலுள்ள கடலில் இன்று வெள்ளிக்கிழமை இறங்கியுள்ளது.

No description available.

அந்த விண்வெளிவீரர்கள் நால்வரும் எமது பூமிக்கு மேலாக 250 மைல் தொலைவில் வலம் வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 177 நாட்களைக் கழித்திருந்தனர்.

No description available.

இந்நிலையில் அந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு சரியாக 24 மணி நேரம் கழித்து இன்று பூமியை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right