நாடு பூராகவும் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான பூரண ஹர்த்தால் கிண்ணியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஹர்த்தால் காரணமாக இன்று (06) கிண்ணியாவிலும் கடைகள் மூடப்பட்டு மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கினர்.

குறிப்பாக அரசாங்க வங்கிகள், பிரதேச செயலகம், தபாலகம், விவசாய அபிவிருத்தி திணைக்களம்,பாடசாலைகள் உள்ளிட்ட அரசாங்க திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளதுடன்  அரச சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டன.  தனியார் பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை .

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்வைக்க கோரியும் அரசாங்கத்தை பதவி விலக கோரியுமே பல தொழிற் சங்கங்கள் குறித்த ஹர்த்தாலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.