நோர்வூட்டில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் போராட்டம்

Published By: Digital Desk 4

06 May, 2022 | 03:44 PM
image

நோர்வூட் எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று (06.05.2022) அரசுக்கு எதிராக பாரிய  ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது

நோர்வூட் கீழ்பிரிவு, வெஞ்சர் கீழ்பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட  தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மேற்படி தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக நோர்வூட் சந்தி வரை வந்து அங்கு அணைவரும் ஒன்றுக்கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்றைய பணிபுறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது  அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு, வீதியில் டயர்களை எரித்து போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53
news-image

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து...

2025-03-26 10:55:06
news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54