நுவரெலியா - இராகலை நகரில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

06 May, 2022 | 03:24 PM
image

நுவரெலியா - இராகலை நகரில் இன்று (06.05.2022) அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இராகலை நகரை சுற்றியுள்ள 10 தோட்டங்களை சேர்ந்த தோட்ட  தொழிலாளர்கள், வலப்பனை கல்வி வலய அதிபர், ஆசிரியர்கள், இளைஞர்கள், யுவதிகள் இராகலை முச்சக்கரவண்டி சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 1000  க்கும் மேற்பட்ட மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் பதாதைகளை கையில் ஏந்தி, கறுப்பு கொடிகளை பிடித்துகொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு இராகலை தோட்டத்திலிருந்து உடப்புஸ்ஸலாவ பிரதான வீதி ஊடாக இராகலை நகர் சென்று, அங்கிருந்து பொலிஸ் நிலைய வீதி ஊடாக முருகன் ஆலயம் வழியே சென்று இராகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நகர வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18