கொட்டகலையில் அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

06 May, 2022 | 02:08 PM
image

(க.கிஷாந்தன்)

கொட்டகலை பிரதேச கல்வி சமூகம் இன்று (06)  நண்பகல் கொட்டகலை நகர் மத்தியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்ககப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக மாணவர்களுக்கு பாடசலைக்கு சமூகமளிப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

சோப்பு வகைகளின் விலை ஏற்றம் காரணமாக  மாணவர்கள் அழுக்கான உடையுடன் பாடசாலைக்கு வருகை தரும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளதுடன், புதிய சீருடைகளை கொள்வனவு செய்வதற்கும் முடியாத நிலைக் காரணமாக மாணவர்கள் உட்பட மலையகத்தின் கல்வி சமூகம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நாட்டினை ஆட்சி செய்ய முடியாத இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற இவர்கள் கோஷம் எழுப்பினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25
news-image

பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய...

2024-06-15 21:49:57
news-image

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு...

2024-06-15 21:24:21
news-image

4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்...

2024-06-15 21:27:01