பூமியை ஒத்த அள­வு­டையதும் அ­தனை ஒத்த வளி­மண்­ட­லத்தைக் கொண்­டி­ருக்கக் கூடியதுமா­ன கற்­பா­றை­யா­லான கோள் ஒன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து 39 ஒளி ஆண்­டுகள் தொலை­வி­லுள்ள கிளி­யஸி 1132 என்­ற­ழைக்­கப்­படும் சிறிய நட்­சத்­தி­ர­மொன்றைச் சுற்றி வலம் வரும் இந்த ஜி.ஜெ.1132பி என்ற கோளா­னது எமது பூமி­யுடன் ஒப்­பி­டு­கையில் 1.2 மடங்கு அள­வு­டை­ய­தாகும். அந்த வகையில் அந்தக் கோள் எமது பூலோ­கத்தை விடவும் 16 சத­வீதம் பெரி­ய­தாகும். அதன் விட்டம் 9200 மைல்­க­ளாகும். அநதக் கோள் பாறை­க­ளாலும் இரும்­பாலும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அங்கு 278 பாகை பர­னைட்­டுக்கும் 584 பாகை பரனைட்டுக்கும் இடைப்பட்ட வெப்பநிலை நிலவுகிறது.