மலையகமும் முழுமையாக முடங்கியது 

06 May, 2022 | 01:15 PM
image

(க.கிஷாந்தன்)

நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்றைய (06.05.2022) ஹர்த்தால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது.

மலையகத்தின் பாடசாலைகள் இயங்காத நிலையில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பொது போக்குவரத்து சேவையில் இருந்து தனியார் பேருந்துகள் விலகியதன் காரணமாக பொது போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சில அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் முழுமையாக பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதுடன் ஒரு சில தோட்டங்களில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் சில தோட்டங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

ரயில் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதனால் இரயில் நிலையங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் பங்கு பற்றிய நிலையில் அரச நிறுவனங்கள் மூடிய நிலையில் காணப்படுகினறன.

மலையகத்தின் வியாபார துறையினரும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதனால் மலையக நகரங்களில் முழுவதுமாக கடைகள் பூட்டப்பட்டு நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நுவரெலியா நகரமும் முடங்கியது

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (06) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று நுவரெலியா நகரிலும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல தொழிற்துறை சார்ந்த இடங்கள் மூடப்பட்டிருந்தன. அத்தோடு  கறுப்பு கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக இன்று காலை முதல் நுவரெலியா நகரம் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56