மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சோசலிச இளைஞர் ஒன்றியம்வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.

அண்மையில் சஜித் பிரேமதாச தொடர்பாக இணையத்தளங்களில் வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தனது அரசியல் இலாபங்களுக்காக தனக்கு நெருங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.