பிரதி  சபாநாயகர் தெரிவுக்கு அரச தரப்பில் ஒருவரை பிரேரித்திருந்தால் பெரும்பான்மையை அறிந்திருக்கலாம் - முன்னாள் பிரதமர் ரணில் 

Published By: Digital Desk 3

06 May, 2022 | 10:09 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பிரதி சபாநாயகர் தெரிவில் அரசாங்க தரப்பில் ஒருவரை நியமித்திருந்தால் அரசாங்கத்தின் பெரும்பான்மையை தெரிந்துகொள்ள முடிந்திருக்கும். அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்து 2 பேர் போட்டியிட்டது விசேட அம்சமாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05) புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் பின்னர் சபையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரதி சபாநாயகர் வேட்பாளராக அரசாங்கத்தினால் ஒருவரை நிறுத்த முடியாமல் போயிருக்கின்றது.  எதிர்க்கட்சியில் இருந்தே இரண்டுபேர் போட்டியிட்டனர். எவ்வாறெனினும் போட்டியிட்ட இருவருமே அதற்கு மிகவும் தகுதியானவர்கள்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏற்கனவே பிரதி சபாநாயகராக செயற்பட்டவர். இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் தந்தையார் இந்த சபையில் சபாநாயகராக பதவி வகித்தவர். என்றாலும் அரசாங்க தரப்பினால் ஒருவரை பிரேரித்திருந்தால் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருக்கின்றதா என்பதை பார்த்துக்கொள்ள முடிந்திருக்கும். என்றாலும் தற்போது நாங்கள் பெறுபேறுகளை ஏற்றுக்காெண்டு நாம் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்.

நாட்டின் நெருக்கடி நிலை உக்கிரமடைந்தது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 

தற்போதைய நிலையில் எதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூடி தீர்மானங்களை மேற்கொண்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பொது ஜன பெரமுனவை அல்ல ராஜபக்ஷவினரையே  வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் இணைந்து தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதே முக்கியம். பாராளுமன்றத்தில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்காமல் போயிருக்கின்றது.

இந்த வாரம் ஒரு தீர்மானம் எடுக்காவிட்டால் பாராளுமன்றத்தை மக்கள் சுற்றிவளைப்பார்கள். அதனால் தற்போது அவசரமாக எவற்றை செய்ய வேண்டுமோ அதனை முடிந்தளவு மேற்கொள்வோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56