பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை - ரவூப் ஹக்கீம்

Published By: Digital Desk 4

05 May, 2022 | 09:58 PM
image

 (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரியது தவிர பிரச்சினைக்கு எந்த தீர்வையும் நிதி அமைச்சர் சபைக்கு தெரிவிக்க வில்லை.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பது நிதி அமைச்சரின் உரை மூலம் தெளிவாகின்றது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாம் யாருக்கு ஆதரவு": விடயத்தை போட்டுடைத்த ரவூப் ஹக்கீம் ..! | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக நிதி அமைச்சர் சபைக்கு தெரிவித்த பின்னர் சமூக வலைத்தலங்களில், நிதி இல்லாத நாட்டுக்கு நிதி அமைச்சர் என்றும் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் நிதி அமைச்சரின் உரைதொடர்பாக எனக்கு பரிதாபமே இருந்தது. ஏனெனில் அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு வந்து சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவிக்கும் 42 பேரையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவையும் அவருக்கு ஏற்பட்டிருப்பதை உணர முடியுமாக இருந்தது.

மேலும் நாங்கள் கடந்த 2வருடங்களாக தெரிவித்து வருவதையே நிதி அமைச்சர் இன்று சபைக்கு அறிவித்திருந்தார். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு எந்த தீர்வும் அவரது பேச்சில் இருக்கவில்லை.

இதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பது தெளிவாகின்றது. 

நிதி அமைச்சர் அவரது உரையில் அரசாங்கம் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரியதை தவிர வேறு எதனையும் தெரிவிக்கவில்லை.  பிரச்சினைக்கு தீர்வுகாண எதிர்க்கட்சியில் இருக்கும் பலரும் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் செவிடன் போன்று பதுங்கு குலியில் இருக்கின்றது. 

காலி முகத்திடலில் இருந்து மக்களின் கோஷம் இவர்களுக்கு கேட்பதில்லை. வீதித்தடைகளை ஏற்படுத்திக்கொண்டு பதுங்கு குலியில் இருந்துகொண்டு இந்த பயணத்தை செல்ல முடியாது. அதேபோன்று எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு இருக்கின்றது. 

20ஆவது திருத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க வேண்டும் என நாங்கள் கோருக்கின்றோம். எமது நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட முடியும். 

விசேடமாக மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்படவேண்டும். ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு தேவையானவர்களை நியமித்துக்கொண்டு, அவர்களின் பூதம் போன்றே மத்திய வங்கியை செயற்படுத்தி வருகி்ன்றது. அவர்களுக்கு தேவையான நேரத்தில் பணம் அச்சிடுகின்றனர்.

குறிப்பாக 19 தொன் தங்கம் இருந்தது. அதில் 15டொன் கடந்த பெப்ரவரி மாதம் விற்பனை செய்திருக்கின்றார்கள். அதன் பின்னர் ஒருவாரத்தில் மீண்டும் ஒருதொனை தங்கம் விற்பனை செய்திருக்கின்றனர். தற்போது ஒரு தொன் தங்கமே இருக்கி்ன்றது. இவ்வாறான நடவடிக்கையால்தான் நாடு இந்தளவு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது. 

இதுதொடர்பாக நாங்கள் தெரிவிக்கும்போது கப்ரால் எங்களை விமர்சித்தார். தேவையான அளவு பணம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் பிழையான வரி கொள்கை காரணமாக எமது வருமானம் பாரியளவில் இல்லாமல்போனது. அதனால் தற்போது நிதி அமைச்சர் சபைக்கு வந்து அரசாங்கத்தின் பிழைகளுக்கு மன்னிப்பு கோருவதன் மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை. அதனால் நந்தைகள் செல்லும்வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07