(எம்.எம்.சில்வெஸ்டர்)

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியினர் பங்கேற்கவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர் நாளைய தினம் (06) ஆரம்பமாகவுள்ளது. 

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஆரம்பம் |  Virakesari.lk

இந்த சுற்றுத் தொடரில் 3 ‍போட்டிகள் கொண்ட 4 நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஆகிய இரண்டு வகையான தொடர்களில் இலங்கை வளர்ந்துவரும் அணி விளையாடவுள்ளது.

இப்போட்டித் தொடரில் பங்கேற்கும்  நிப்புன் தனஞ்சய தலைமையிலான இலங்கை வளர்ந்துவரும் இலங்கை அணியானது, இங்கிலாந்திலுள்ள பிராந்திய  கிரிக்கெட் அணிகளுடன் விளையாடவுள்ளது. 

இந்த கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கென்ட், ஹேம்ஷயர், சர்ரே, சொமர்செட், கிளொஷ்டஷயர் ஆகிய பிராந்திய அணிகளின் வீரர்களுடன் விளையாடுவது இலங்கை வீரர்களுக்கு புதிய அனுவத்தையும், சர்வதேச தரமிக்க  வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடுவதற்கான சிறந்த சந்தரப்பமாகவும் அமைவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இதன்படி முதல் போட்டியில் கென்ட் அணியையும், இரண்டாவது  போட்டியில் ஹேம்ஷயர் அணியையும், மூன்றாவது போட்டியில் சர்ரே அணியைும் 4 நாள்  கொண்ட கிரிக்கெட் தொடரில் இலங்கை வளர்ந்துவரும் அணி எதிர்த்தாடவுள்ளது. 

அந்த வகையில், ‍நாளை நடைபெறவுள்ள போட்டியானது கென்ட் பிராந்தியத்தின் கென்டர்பெரியிலுள்ள சென். லோரன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு  ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை வளர்ந்து வரும் குழாம் விபரம்

நிபுன் தனஞ்சய ( 4 நாட்கள் அணித் தலைவர்), தனஞ்சய லக்சான் (இருபதுக்கு 20 அணித் தலைவர்), லசித் குருஸ்புள்ளே, அவிஷ்க பெரேரா, சந்தோஷ் குணதிலக, அவிஷ்க தரிந்து, நுவனிந்து பெர்னாண்டோ , நிஷான் மதுஷ்க, அஷேன் பண்டார , துனித் வெல்லாலகே, திலும் சுதீர, அஷெய்ன் டேனியல் , நிபுன் மாலிங்க, நிபுன் ரன்சிக்க, மானெல்கர் டி சில்வா, யசிரு ரொட்ரிகோ , உதித் மதுஷான் , அம்ஷி டி சில்வா 

போட்டி அட்டவணை விபரம்

திகதி போட்டி                    எதிரணி

மே 06 - 09  மே  1 ஆவது 4 நாள் ‍போட்டி      கென்ட்

மே 06 - 09  மே 1 ஆவது 4 நாள் ‍போட்டி      கென்ட்

மே 20 -23    3 ஆவது 4 நாள் ‍போட்டி             சர்ரே

மே 25 1 ஆவது டி20  ‍போட்டி              சர்ரே 

மே 27 2 ஆவது டி20 போட்டி                 சொமர்செட்

மே 29 3ஆவது டி20 போட்டி                  கிளொஸ்டர்ஷயர்