சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து குடும்பஸ்தர் கோட்டாகோகம நோக்கி பயணம்

By T. Saranya

05 May, 2022 | 04:54 PM
image

(அட்டன் நிருபர்)

நுவரெலியா - டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து இன்று (05) காலை இரண்டு பிள்ளைகளின் தந்தையான  குடும்பஸ்தர் கொழும்பில் காலிமுகத்திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நடைபவனியாக 178 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் பயணத்தினை ஆரம்பித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் ஏமாற்றம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 33 வயதுடைய  புஷ்பநாதன் தியாகு என்பவேரே இவ்வாறு நடை பயணத்தினை ஆரம்பித்தார்.

இவரின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ நடை பயணம் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்து தோட்டத்திலுள்ள 150 க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு முன்பாக அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கோட்டா கோ ஹோம் என தெரிவித்து தேங்காய் உடைத்து எதிர்ப்பை வெளியிட்டனர். 

அதனைத் தொடர்ந்து புஷ்பநாதன் தியாகு   தேசிய கொடியை ஏந்தி நடை பயணத்தை ஆரம்பித்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்த இம்மக்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் கொண்ட  டயகம நகரம் வரை பேரணியாக வருகை தந்தனர்.

கொழும்பு நோக்கி பயணம் செய்யும் குறித்த நபருக்கு ஆதரவாக நகரத்தில் உள்ள வர்த்தகர்கள் பிரதேச மக்கள் அமோக வரவேற்பு வழங்கினார்கள். அதேவேளை இவருக்கு மன்றாசி நகரத்திலும் வரவேற்பு வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right