மருத்துவ விஞ்ஞான கல்வியகத்தின், மருத்துவ ஒன்றியல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு Royal Wolverhampton NHS Trust உடன் பூரண புலமைப்பரிசிலை வழங்குவதற்காக கைகோர்த்துள்ளது. 

ஐக்கிய இராஜ்ஜியத்தில் தாதியர் மற்றும் சரும ஆரோக்கிய தொழில் நிபுணர்களுக்கான புதிய வாய்ப்பு

புகைப்படத்தில்: Wolverhampton Trust UK, சோ மாஷ் - பிரதி பணிப்பாளர், எமிலி வர்த் - நிகழ்ச்சி முகாமையாளர், டரெக் ஹாசெய்ன் - சிரேஷ்ட செயற்றிட்ட முகாமையாளர், ரக்ஷித்த துடாவே – முகாமைத்துவ பணிப்பாளர், Amrak மற்றும் ரங்க விமலசூரிய – நிறைவேற்று பணிப்பாளர், Amrak

புகைப்படத்தில்: சரோஜா சிறிசேன அவர்கள் - ஐக்கிய இராஜ்ஜியத்தின் முதன்மை ஆணையாளர், சமந்த பத்திரண அவர்கள் - ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதி ஆணையாளர், முகாமைத்துவ பணிப்பாளர் Amrak – ரக் ஷித்த துடாவே, நிறைவேற்று பணிப்பாளர் Amrak – ரங்க விமலசூரிய மற்றும் Medics Academy இன் பிரதான நிறைவேற்று திகாரி – ஜொஹான் மாலவன

Amrak மருத்துவ விஞ்ஞான கல்வியகத்தின், தாதியர் மாணவர்களுக்கும் சரும ஆரோக்கிய தொழில் நிபுணர்களுக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் வாய்ப்பொன்றை வழங்குவதற்காக பூரண புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்துடனான NHS உடன் முன்னோக்கி பயணித்திட டேர்டன்ஸ் மருத்துவமனையின் இணை நிறுவனமான Amrak மருத்துவ விஞ்ஞான கல்வியகத்தின் Royal Wolverhampton NHS இன் ஒத்துழைப்புடன் மருத்துவ ஒன்றியல் (CFP) நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக 3 வருடங்களுக்கு வேலைவாய்ப்புடன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

Amrak பிரதிநிதிகள், ஐக்கிய இராஜ்ஜியத்தில் இலங்கைக்கான முதன்மை ஆணையாளர் - சரோஜா சிறிசேன அவர்களை சந்தித்ததோடு இலங்கையில் தற்பொழுது காணப்படும் பொருளாதார நெருக்கடியினால் சுகாதார சேவைகளை மையமாகக் கொண்ட மாற்று நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது பற்றியும் மாணவர்களது வளர்ச்சியை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை தொடர்புபடுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இவ்வரிய வாய்ப்பின் ஊடாக தாதியர்களுக்கு சத்திரசிகிச்சை, உள ஆரோக்கியம், எலும்பியர் தொடர்பான மருத்துவ விஞ்ஞானத்தில் பல்வேறு துறைகள் பற்றி கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்படுவதோடு ஐக்கிய இராஜ்ஜியத்தின் Black Country மாநிலத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் நோயாளர்களை மையமாகக் கொண்ட சத்திரசிகிச்சைகள் ஊடாக சேவை அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளுண்டு.

CFP பெற்றுக்கொள்வதற்கான தகைமைகள்

  • தாதியர் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா கற்றிருத்தல்

  • 2 வருட சத்திரசிகிச்சை தொடர்பான அனுபவம்

  • நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்றக்கூடிய ஆற்றல்.

  • குழுச்செயற்பாடு

  • உயர்தரத்தில் சிகிச்சையை வழங்குவதற்கான ஆர்வம்

  • ஐக்கிய இராஜ்ஜியத்தில் தாதியர் அல்லது குடும்ப சுகாதார சேவை அதிகாரி கழகத்தில் பதிவினை மேற்கொள்வதற்கான OET B/ IELTS 7 பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

  • திறன்கள் தொடர்பில் NMC பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்: 1 பகுதி – கணினிசார் பரீட்சை மற்றும் 2 பகுதி – செயன்முறை பரீட்சை – (நேர்முகத்தேர்வில் சித்தியடைவதின் கீழ். பகுதி 2 ஐக்கிய இராஜ்ஜியத்தில் இடம்பெறும்)

  • நீங்களும் இன்றே Amrak உடன் இணைந்து ஐக்கிய இராஜ்ஜியத்தில் தாதியராவதற்கான வாயப்பைப் பெற்றிடுங்கள்!

இத்திட்டத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் என்ன?

• 3 வருட கால வேலைவாய்ப்பு

• Band 3 - 22 000 பவுண்ட்ஸ்

• சம்பளம் ஒரு வருடத்திற்கு

• Band 5 - 25 000 பவுண்ட்ஸ்

• சம்பளம் 2 மற்றும் 3 வருடத்திற்கு

• BSc அல்லது MSc முழுமையாக நிதியளிக்கப்பட்டது

• தங்குமிடம் மற்றும் பயண வசதி

• மருத்துவ காப்புறுதி

• பரீட்சைக் கட்டணத்தை மீளப்பெறுதல் OET,CBT 1 & CBT 2

• நிதியளிக்கப்பட்ட OSCE Boot camp மற்றும் பரீட்சை , சுகாதாரத்துறையில் சர்வதேச தரத்திற்கு இணையான சிறப்புத் தேர்ச்சிபெற்ற இலங்கை பணியாளர்களை உருவாக்குவதற்கான சிறந்த பாதைகளை Amrak கல்வியகம் அமைத்துக்கொடுக்கிறது.

ரக் ஷித துடாவே - Amrak மருத்துவ விஞ்ஞான கல்வியகத்தின் நிர்வாக இயக்குநர்

வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் படிமுறைகள்.

தகுதிவாய்ந்த தாதியர் வல்லுநர்கள் மருத்துவ உதவித்தொகை மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தமுடியும்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள Amrak CFP பாதையை தேர்ந்தெடுக்கலாம்.

இத்திட்டம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு (www.amrak.lk) எனும் எமது இணையதளத்தை பார்வையிடலாம். அல்லது 077 797 4479 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.