(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் சார்பில் எனது பெயரை பரிந்துரை செய்யும் தீர்மானத்திற்கு இன்று காலை வரை சகல தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்த வேளை இறுதி தருணத்தில் அத்தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டது. எதிர்தரப்பினரது செயற்பாடு ஒரு காட்டிக்கொடுப்பு என்றே கருதுகிறேன் என புதிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய சபையில் குறிப்பிட்டார்.
![]()
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சபையில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.
பிரதி சபாநாயகர் பதவி அரசாங்கத்தின் பதவியல்லாத போதும் சுதந்திர கட்சியினரது அரசியல் தீர்மானத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினேன். புதிய பிரதி சபாநாயகர் தெரிவு சிறந்த முறையில் இடம்பெற்றது. எனக்கு ஆதரவாக வாக்களித்த சகல தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் சார்பில் எனது பெயரை பரிந்துரை செய்யும் தீர்மானம் நேற்று எடுக்கப்பட்டது. இன்றுகாலை வரை அத்தீர்மானம் மாற்றமடையவில்லை. ஆனால் இறுதி தருணத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவி ஊடாக எதிர்க்கட்சியினரது பலத்தை ஒன்றினைந்து உறுதிப்படுத்த எதிர்பார்த்தோம். இருப்பினும் எதிர்ககட்சியினரது தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டமை ஒரு காட்டிக்கொடுப்பாக கருதுகிறேன் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM