உறவின் மீது விருப்பம் ஏற்படுவதற்கு சில உணவுப் பொருட்கள் உதவுகின்றன என்று சொல்லப்படுவது உண்மைதானா?

உண்மைதான். பாலுணர்வை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. முக்கியமாக சிறிய வெங்காயம்.

இதனால்தான் இல்லற வாழ்க்கையைத் துறந்த ஆண்களும், உடலுறவு நாட்டத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பும் ஆண்களும் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும்போது இதன் முழுப்பலனையும் பெற முடியும். முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையும் இவ்வகையினதே.

வெற்றிலை போடும் பழக்கத்தாலும் பாலுணர்வு அதிகரிக்கும் என்பார்கள். இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டிறைச்சியை எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிட்டாலும் பாலுணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒரு சில வைத்திய முறைகளில் அஜமாமிச லேகியம் என்று கூறப்படுவது ஆட்டிறைச்சியை அடிப்படையாகக் கொண்டவையே. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

கடலில் காணப்படும் சிப்பி வகை உணவு, ஆண்களின் பாலுணர்வை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாகக் கூறுகின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.