நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டதென கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவின் வழக்கின் போது அவரது சட்டத்தரணிகள், நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டரீதியானது அல்ல என கடந்த வழக்கு விசாரணையின் போது மனு தாக்கல் செய்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விசாரணைப் பிரிவானது பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்டரீதியானது என தெரிவித்துள்ளார்.