(என்.வீ.ஏ.)
சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிராக புனே, மகாராஷ்டிரா விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 13 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை றோயல் செலஞ்சர்ஸ் வெற்றி பெற்றது.
கடந்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அடைந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றியீட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், அணிகள் நிலையில் நான்காம் இடத்துக்கு முன்னேறி தனது ப்ளே ஓவ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.
மறுபுறத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதுடன் அதன் ப்ளே ஓவ் வாய்ப்பு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.
இந்தப் போட்டியின் கடைசி 2 ஓவர்களை ஜொஷ் ஹேஸ்ல்வுட், ஹர்ஷால் பட்டேல் ஆகிய இருவரும் சாமர்த்தியமாக வீசி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரின் வெற்றியை உறுதிசெய்தனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷனவும் துடுப்பாட்டத்தில் டேவிட் கொன்வேயும் திறமையை வெளிப்படுத்தியபோதிலும் கடைசியில் அவை வீண் போயின.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ருத்துராஜ் கய்க்வாடும், டேவிட் கொன்வேயும் 40 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், ருத்துராஜ் கய்க்வாட் (28), ரொபின் உத்தப்பா (1) ஆகிய இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்ததுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆட்டம் கண்டது.
மொத்த எண்ணிக்கை 75 ஓட்டங்களாக இருந்தபோது அம்பாட்டி ராயுடு (10) களம் விட்டகன்றார். தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டேவிட் கோன்வே 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.
16ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றிருந்த சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றிக்கு 25 பந்துகளில் மேலும் 52 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரவிந்த்ர ஜடேஜா (3) மொயீன் அலி (34), எம்.எஸ். தோனி (2), ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் (13) ஆகியோர் ஆட்டமிழக்க சென்னை சுப்பர் கிங்ஸின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.
மஹீஷ் தீக்ஷன 7 ஓட்டங்களுடனும் சிமர்ஜீத் சிங் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ளென் மெக்ஸ்வெல் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது.
பவ் டு ப்ளெசிஸ் (38), விராத் கோஹ்லி (38) ஆகிய இருவரும் 7.2 ஓவர்களில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், டு ப்ளெசிஸ், க்ளென் மெக்ஸ்வெல் (3), கோஹ்லி ஆகிய மூவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
மஹிபால் லொம்ரோர், ரஜாத் பட்டிதார் (21), ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்த முயற்சித்தபோது பட்டிதார் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் மஹிபால் லொம்ரோர் (42), வனிந்து ஹசரங்க (0), ஷாபாஸ் அஹ்மத் (1) ஆகிய மூவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
எனினும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்று அணியைப் பலப்படுத்தினார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக சிறப்பாக பந்துவீசிய மஹீஷ் தீக்ஷன 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொயீன் அலி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM