ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டதாக அண்மைய நாட்களில் அரங்கேற்றிய நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து சுமந்திரன்,
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டதாக அண்மைய நாட்களில் அரங்கேற்றிய நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததை தொடர்ந்து சுதந்திர கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அறிவித்தார்.
பிரதி சபாநாயகரின் பதவி விலகல் தீர்மானத்தை ஜனாதிபதி அப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளாததை தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிடிய நிபந்தகைளின் அடிப்படையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை பிரதி சபாநாயகராக பதவி வகிக்க தீர்மானித்துள்ளதாக சபைக்கு அறிவித்தார்.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை பிரதி சபாநாயகர் பதவி வகிப்பதாக சுதந்திர கட்சியின் உறுப்பினரது தீர்மானத்தை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா,ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாகர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஏன்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்று பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து பதவி விலகிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடகம் அம்பலமாகியுள்ளது என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவிற்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டால் வாக்கெடுப்பின் ஊடாகவே பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அந்தவகையில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதி சபாநாயகராக பதவி வகித்த திலங்க சுமதிபால பதவி விலகியதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆனந்த குமார சுவாமி, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
ஆனந்த குமாரசுவாமி 80 ற்கும் அதிகமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து அவர் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM