சமீப காலங்களில் அதிகமாக பெண்களை அச்சுறுத்தும் பிரச்சினையாக இருப்பது பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையாகும். பொலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பிரச்சினை வருவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்று தான் கூறவேண்டும்.
* நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.
பிசிஓடி உள்ள பெண்களுக்கு கருமுட்டை தாமதமாக உருவாகும் அல்லது உருவாகாது. இதனால் வழக்கமான மாதவிடாய் சுழற்சியானது பாதிப்படையும். ஒழுங்கற்ற மாதவிடாயால் குழந்தைப் பேறும் தாமதமாகும். இதனால் ஹோர்மோன் சமநிலையின்மை ஏற்படும். மேலும், உடல் எடை அதிகரிப்பு, தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
* சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான் என்று சரியாக கூற முடியாவிட்டாலும் பொதுவான காரணம் என்று பார்த்தால், மரபணு காரணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என சீராக இல்லாமல் தாமதமாக வருவது அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவது, உடல் எடை மிகவும் குறைவது அல்லது உடல் எடை மிகவும் அதிகரிப்பது இவை அனைத்தும் நீர்க்கட்டி உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.
* நீர்க்கட்டி ஏற்படுவதால் முகத்தில் அல்லது தேவையற்ற இடங்களில் முடி வளர்வது, தலை முடி கொட்டுவது, குரல் மாறுபாடு, முகத்தில் அதிக அளவில் முகப்பரு ஏற்படுவது, மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
* பிசிஓடி பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன், இரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். நீர்க்கட்டி பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டால் இரத்த அழுத்தம், குளுக்கோஸ் டாலரன்ஸ் மற்றும் கொலஸ்ட்ரோல் டிரைகிளிசரைடு அளவுகளை அவ்வப்பொழுது சோதித்து சரிபார்க்க பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான சரியான வழிமுறைகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM