நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் முகத்தின் வடிவம் கூறும் - புதிய ஆய்வு

05 May, 2022 | 11:19 AM
image

சதுர வடிவமான முகத்தைக் கொண்டவர்கள்  முட்டை வடிவமான முகத்தைக் கொண்டவர்களை விடவும் முரட்டுத்தனமானவர்கள் என புதிய பிரித்தானிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

ரோயல் சொசைட்டி ஓப்பின் சயன்ஸ் ஆய்வேட்டில் பிரசுரமான மேற்படி ஆய்வின் முடிவுகள் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் இன்று புதன்கிழமை தகவல்களை வெளியிட்டுள்ளன.

17,607 ஆண்கள் மற்றும் பெண்களது கடவுச்சீட்டுப் புகைப்படங்களின்  முக அகலம் மற்றும் முக உயரத்தை அளவிட்டு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சதுர முகம் கொண்டவர்கள் குறிப்பாக அவர்கள் இளம் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் முரட்டுத்தனம் கொண்டவர்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேற்படி ஆய்வில் பங்கேற்ற ஆய்வுக் குழுவினர்  ஒருவரது முரட்டுத்தனத்திற்கும் அவரது முகத்தின் வடிவத்திற்கும் தொடர்புடையதா என்பது குறித்து ஆராய்ந்தனர்.

அறிமுகமற்றவர்கள் தொடர்பில் முதல் பார்வையொன்றின் பின்னரான சமூக அனுமானங்களில் அவர்களது முகம் செல்வாக்குச் செலுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

முக வடிவமைப்பானது  ஒருவரைப் பற்றிய பல்வேறு சமூக ரீதியான அனுமானங்களிலும் முக்கிய வகிபாகத்தை வகிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் 6 வயதிலிருந்து 93 வயது வரையான வயதைக் கொண்டவர்களாவர்.

ஒருவரது முகத்தின் வடிவமைப்பானது (எப்.டபிள்யூ.எச்.ஆர்.) ஒருவரது முகத்தின் அகலத்தை அவரது மேலுதட்டின் மேல் பகுதிக்கும் கண் இமையின் மேல் பகுதிக்குமிடையிலான தூரத்தின் அளவால் பிரித்துக் கணிப்பிடப்படுகிறது. இதன் பிரகாரம் சதுரமுகம் கொண்டவர்களுக்கு  இந்த அளவீடு உயர்வாகஉள்ள நிலையில் முட்டை வடிவ முகம் கொண்டவர்களுக்கு இந்த அளவீடு தாழ்வாக காணப்படுகிறது.

மேற்படி அளவீடு 27 வயதுக்கும் 40 வயதுக்குமிடைப்பட்ட வயதில் உள்ளவர்கள் மத்தியில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

துணையைத் தேடுதல் மற்றும்  பாலியல் ரீதியான போட்டியுடன் இணைந்ததாக பொதுவாகக் காணப்படும் மேற்படி வயதுப் பருவத்திலுள்ளவர்களின் முகத்தின் வடிவமைப்பானது  அந்த வயதிலான பாலியல் ஈரினவியல்பு மற்றும் உடல் வலிமையையும் குறிப்பிடும் பரிணாம முக்கியத்துவம் மிக்க ஒன்றாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் வயதுவந்த பெண்களின் சதுர முகமானது  வயது சம்பந்தமான மாற்றங்களுடன் தொடர்புபட்டதாக உள்ளதால் அவர்களிடம் முரட்டுத் தன்மையை பெரிதளவில் காணவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அகலமான முகத்தைக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஏனைய வடிவமைப்புடைய முகத்தை உடையவர்களை விடவும் பாலியல் ரீதியில் அதிகளவில் தூண்டுதல் அடைகின்றனர் என கனேடிய நிபிஸ்ஸிங் பல்கலைக்கழகத்தால்  இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று  தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழியின் கால் பாதங்களை உட்­கொள்­வதில் புதிய...

2022-09-30 12:57:29
news-image

சூறா­வ­ளிக்கு மத்­தியில் செய்தி வழங்­கும்­போது ஒலி­வாங்­கியை...

2022-09-30 12:36:10
news-image

கேக்கில் வடிவமைக்கப்பட்ட சுயவிபரக்கோவை

2022-09-28 12:52:07
news-image

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்...

2022-09-27 12:33:32
news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56
news-image

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை...

2022-08-29 20:59:45