நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டும் - ரணில் 

Published By: Digital Desk 4

04 May, 2022 | 09:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாடவேண்டும். பிளவுகளை விட ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய முக்கிய தேவையாக  உள்ளது. அத்துடன் வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தேவையற்ற செலவுகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அரசியல் வெடிப்பு ஏற்படலாம் - ரணில் சபையில்  எச்சரிக்கை | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பிரச்சினைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இடைக்கால அரசாங்கமா அல்லது தனியான அரசாங்கத்தை அமைப்பதா என்பது தொடர்பிலும் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டு வருகின்றன.

எனினும் இத்தகைய சூழ்நிலையில் தேவையற்ற செலவுகள் நிறுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று  நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஸ்ரீலங்கன் விமான சேவை 25 எயார் பஸ்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் பேசப்படுகிறது. எவ்வாறெனினும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி எயார் பஸ்களை கொள்வனவு  செய்ய அனுமதிக்கவேண்டாம்.

கோப் குழுவும் அது தொடர்பில்  முடிவுகளை அறிவித்துள்ளது. அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அவசியமற்ற செலவுகளை நீக்க வேண்டும். நீக்கக்கூடிய அனைத்தையும் நீக்கி, மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

நம்பிக்கையில்லா பிரேரணை, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேசப்படுகின்றது. அதனை பேசலாம். ஆனால்  தற்போதைய நிலையில் பிளவுகளுக்கு முன் இணைந்து செயற்படுவதிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாடவேண்டும். 

அதேபோன்று 2020,2021 காலப்பகுதியில் எரிபொருள் மூலம் கிடைத்த வருமானத்தை நிதியம் அமைத்து பாதுகாத்து, அந்த பணத்தை வேறு தேவைக்காக பயன்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

அந்த பணம் எங்கே என கேட்கின்றோம். அதன் மூலம் தற்போதுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் எமது ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சர்வதேச நாடுகளுடன் கோபித்துக்கொண்டு இதனை செய்ய முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44