மகுடம் பதிப்பகத்தின் 50 வது வெளியீடான "தியாகத்தீயில்" சிறுகதை நூல் வெளியீட்டு வைபவம் விபுலானந்தர் இணையக் கல்விக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு றோமன்சோதி ஜெரோம் தலமையில் திருகோணமலை கோணேஸ்வரா இ. கி. ச. இந்துக்கல்லூரி ஆரம்பபிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை ஆலங்கேணி கிராமத்தைச்சார்ந்த வரும் ஜெர்மனி யை வதிவிடமாகவும் கொண்ட சிறந்த எழுத்தாளர் மயில் மகாலிங்கம் இந்நூலை எழுதி மகுடத்தில 50வது நூலாக வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம வருந்தினராக வவுனியா கல்வியல்கல்லூரி உபபீடாதிபதி சதாசிவம் பவானந்தன், கௌரவ விருந்தினராக கலாச்சார உத்தியோகத்தர் க. அன்பழகன், முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டபாணி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இங்கு மூத்த இலக்கியவாதிகள் பலரும் கௌரவிக்கப்பட்டனர். 

தொகுப்புரையை கவிஞர். க. யோகானந்தம் நிகழ்த்த, வெளியீட்டுரை யை மகுடம் ஆசிரியர் மைக்கல்கொலின் நிகழ்த்தினார்.

நூல் நயவுரையை கவிஞர் ந. காளிராஜா நிகழ்த்த நன்றி யுரையை நூல் ஆசிரின் சகோதர ரும் கவிஞருமான ம. உதயகுமார் நிகழ்த்தினார்.இது நூலாசிரியரின் இரண்டாவது நூலாகும்.