டுவிட்டரைப் பயன்படுத்தும் அரசாங்க மற்றும் வணிக ரீதியிலான பயனர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு  வாங்கிய எலான் மஸ்க் டுவிட்டரின் செயல்பாடுகள் சிலவற்றை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், சாதாரண பயனர்கள் எப்போதும்போல் டுவிட்டரைப் பயன்படுத்தலாம் என்றும் அரசாங்கம் மற்றும் வணிக ரீதியிலான பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.