உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 55  பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

04 May, 2022 | 04:15 PM
image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தமை தொடர்பாக சந்தேகத்தில்; கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த  55  பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர்போல் இன்று புதன்கிழமை (04)  உத்தரவிட்டார். 

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்; காத்தான்குடியை சேர்ந்தவர்கள் ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட  69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிசார் வழக்கு தாக்குல் மேற்கொண்ட நிலையில், இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

இதில் ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள்; நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் 5 பேர் பிணையில் விடுவிக்க்பட்டதையடுத்து 55 பேர் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்  இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  பலத்த பாதுகாப்புடன்  சிறைச்சாலைகளில் இருந்து அனைவரையும் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள்...

2024-06-24 15:08:58
news-image

கல்முனை பகுதியில் பதற்ற நிலை ;...

2024-06-24 15:45:07
news-image

விகாரைக்கு சென்று விட்டு வீடு திரும்பியவரை...

2024-06-24 15:04:30
news-image

2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய...

2024-06-24 15:25:32
news-image

வன பகுதியில் ஏற்பட்ட தீயால் 20...

2024-06-24 15:02:43
news-image

விமானத்தில் இலங்கையரின் பயணப் பொதியில் திருட்டு...

2024-06-24 14:59:17
news-image

ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக...

2024-06-24 15:09:42
news-image

இரு பாரிய கஞ்சா செய்கையை ட்ரோன்...

2024-06-24 14:38:45
news-image

நீராடச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது...

2024-06-24 14:36:25
news-image

யாழ்.இளைஞனை வெளிநாட்டு அனுப்புவதாக கூறி பணமோசடி...

2024-06-24 14:23:36
news-image

1700 ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு...

2024-06-24 13:59:40
news-image

யாழில் தம்பதியினர் மீது வாள் வெட்டு

2024-06-24 13:53:10