(எம்.மனோசித்ரா)
மத்திய வங்கி பிணை முறி மோசடியின் போது கொள்ளையிடப்பட்ட பணம் எனக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையெனில் , என்மீது வழக்கு தொடருமாறு வசந்த சமரசிங்கவிற்கு சவால் விடுக்கின்றேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சு.க. தலைமையகத்தில் கொழும்பில் புதன்கிழமை(5) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீது சேரூ பூசும் செயற்பாடுகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமையைப் போன்று உண்மையில் எமக்கு பணம் வழங்கப்பட்டிருந்தால் , ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே முறைப்பாடளித்திருக்க முடியும்.
எனக்கு 2015 ஜூலை 13 ஆம் திகதி காசோலை வழங்கப்பட்டது.
எனினும் அந்த காசோலை பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினுடையதல்ல.
2015 ஜூன் 26 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியாகும்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகவே எனவே நெருங்கிய நண்பரான புவனேக கொலன்னே காசோலையை எனக்கு வழங்கினார்.
இது தேர்தல் காலங்களின் போது வழிமையாக இடம்பெறும் நடைமுறையாகும்.
இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னை சாட்சியாகவோ அல்லது பொறுப்புகூற வேண்டியவராகவோ குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பில் நான் எனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் வழக்கு விசாரணைக்கு கூட அழைக்கப்படவில்லை.
இந்த வழக்கு இன்றும் முன்னெடுக்கப்படுகிறதா என்பதும் எனக்கு தெரியாது.
எவ்வாறிருப்பினும் மீண்டும் இந்த வழக்கினைத் தொடர்ந்தாலும் என்தரப்பு ஆதரங்களை முன்வைப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
வசந்த சமரசிங்க போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக அவர் மீது எம்மால் வழக்கு தொடர முடியும்.
எனினும் விசாரணைகள் நிறைவடைவதற்கு சுமார் 10 வருடங்களேனும் செல்லும்.
எனவே நாம் வழக்கு தொடர்வதைவிட வசந்த சமரசிங்க எம்மீது வழக்கு தொடர்ந்தால் விரைவாக உண்மையை அறிய முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM