சிட்னியில் " ஒஸ்காரின்" சித்திரை கலாசார விளையாட்டு விழா

Published By: Digital Desk 5

04 May, 2022 | 02:58 PM
image

'ஒஸ்கார் "அமைப்பின் 2022ஆம்  ஆண்டுக்கான சித்திரை கலாசார விளையாட்டுவிழாவும் ஒன்றுகூடலும் கடந்த 5ஆண்டுகளுக்குப்பிற்பாடு  சிட்னி நகரில்  parramatta park இல் கோலாகலமாக  நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் வதியும் காரைதீவு மக்களது அமைப்பான "ஒஸ்கார்"அமைப்பின் தலைவர் வீ.விவேகானந்தமூர்த்தி தலைமையில் இவ்வாண்டு அந்நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

கலாசார நிகழ்வுகளில் வரிசையில் மிட்டாய் பை ஓட்டம்,  பலூன் காலில் கட்டி உடைத்தல் ,சாக்கு ஓட்டம்  ,தேசிக்காய் ஓட்டம் , பணிஸ் உண்ணல் ,முட்டி உடைத்தல் ,சங்கீத கதிரை, கயிறிழுத்தல் முதலான சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வுகளும்  இனிதே நடைபெற்றது .

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளின் இடையில்,  Auskar Cricket Carnival 2022 என பெயரிடப்பட்டு Auskar power Hitters( Working committee team) vs Auskar Family Stars (Family members team)இடையிலான 8  overs மட்டுப்படுத்தப்பட்ட கண்காட்சி மென் பந்து கிரிக்கெட் போட்டியொன்றும் சுவாரஸ்யமாக இடம்பெற்றது.

இதன்போது  ஒஸ்கார் அறிமுகம் செய்த புதிய  T-Shirt (Baggy Green) ஐ Auskar Family Stars   அணியும், நிர்வாக உறுப்பினர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ( (White) T-Shirt ஐ Auskar Power Hitters  அணியும் அணிந்து போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இந்த போட்டியின் சாம்பியன் மகுடத்தை Auskar power Hitters  அணி சுவீகரித்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ஒஸ்கார் குடும்ப உறவுகள் நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள்  என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

அனைவருக்கும் ஒஸ்கார் நிர்வாக குழாம் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது என" ஒஸ்கார் "செயலாளர் அ.மகேந்திரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச கீதா ஜெயந்தி யாகம்

2024-03-01 23:56:27
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் 150 ஆவது...

2024-03-01 23:41:26
news-image

யோர்ச் அருளானந்தம் எழுதிய 'மண்ணும் மனிதர்களும்'...

2024-03-01 21:22:01
news-image

கடற்புல் தொடர்பான அறிவுப் போட்டியில் வென்ற...

2024-03-01 18:52:58
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது...

2024-03-01 17:32:17
news-image

தெஹிவளை வடக்கு லயன்ஸ் கழகத்தின் அகில...

2024-03-01 15:14:35
news-image

அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மன்ற...

2024-03-01 12:55:05
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-02-29 18:40:45
news-image

புங்குடுதீவு கலட்டியம்பதி ஸ்ரீ வரசித்தி விநாயகர்...

2024-02-29 16:12:38
news-image

கொழும்பில் ஜவுளித் தொடர் கண்காட்சி இன்று...

2024-02-29 10:30:10
news-image

மாதகலில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...

2024-02-28 20:40:04
news-image

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு...

2024-02-28 20:42:16