(ஏ.என்.ஐ)
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் என்ற போர்வையில் சீனக் குற்றவியல் குழுக்கள் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவது சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில் பல சீன குற்றவியல் குழுக்கள் உள்ளன.
இந்த குழுக்கள் கொவிட்-19 காலப்பகுதியை சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையே கடந்த தசாப்தத்தில் பொருளாதார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பிராந்தியத்தில் சீன முதலீட்டில் கூர்மையான அதிகரிப்பைக் வெளிப்படுத்துகின்றது.
ஆனால் அத்தகைய நிறுவனங்கள் சட்டவிரோத பரிமாணத்தைக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 10-11 திகதிகளில் எல்லை தாண்டிய நடவடிக்கையில், தாய்லாந்து மற்றும் கம்போடிய பொலிசார் 68 தாய்லாந்து தொழிலாளர்களை சீன மோசடி கும்பல்களிடமிருந்து மீட்டுள்ளனர்.
சீனப் பிரஜைகளின் வழிகாட்டுதலின் கீழ் தொலைபேசி மோசடிகளை நடத்துவதில் இந்த தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் எல்லையில் உள்ள கம்போடிய நகரமான போய்பெட்டில் அதிக ஊதியம் பெறும் இணைய விற்பனை வேலைகள் தொடர்பில் வாக்குறுதிகளுடன் தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் இவர்கள் கம்போடியாவுக்கு வந்தவுடன், அவர்களின் பயண ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM