மேற்கிந்தியத் தீவுகளுக்கு புதிய அணித் தலைவர்

Published By: Digital Desk 5

04 May, 2022 | 11:56 AM
image

(என்.வீ.ஏ.)

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளின் புதிய அணித் தலைவராக நிக்கலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

No description available.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபது 20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவராக இருந்து வந்த சகலதுறை வீரர் கீரன் பொலார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  கடந்த மாதம்   ஓய்வு பெற்றார்.

இதனை அடுத்து இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளின் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டது.

இந் நிலையில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிக்கலஸ் பூரனிடம் தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம்) உத்தியோகபூர்வமாக  அறிவித்தது.

நிக்கலஸ் பூரன் 37 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 57 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளதுடன் இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தலா 1,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அதிரடி ஆட்டக்காரரான நிக்கலஸ் பூரன், தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் அசத்தி வருகிறார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்