Published by T. Saranya on 2022-05-04 11:35:25
ஸ்னப் நிறுவனம் ஃப்ளையிங் கமரா என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
இது ஸ்னப் நிறுவனத்தின் ஸ்னப் சாட் செயலிக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
'ஸ்னப் சாட் ' என்பது புகைப்படங்களை உடனுக்கு உடன் எடுத்து பல்வேறு எடிட்களை செய்து செய்திகளை அனுப்பும் மிகப்பிரபலமான செயலியாகும்.
ஸ்னப் சாட்டில் செல்பி புகைப்படங்களை ஃப்ளையிங் கமரா என்ற புதிய அம்சத்தில் எடுக்கமுடியும்.

இது Pixy என அழைக்கப்படும் சிறிய மஞ்சள் ட்ரோன் கமரா ஆகும். செல்பி ஸ்டிக் இல்லாமல் செல்பி எடுக்க மக்களுக்கு உதவும் "ஃப்ரீ-ஃப்ளையிங் சைட்கிக்" (free-flying sidekick) என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, Pixy தானாகவே இயங்கக்கூடியது, அது பறக்கும் போது வீடியோ எடுக்கிறது, பின்னர் அது சேமிக்கப்படுகிறது.
இந்த புதிய அம்சம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பயனர்களுக்கு கிடைக்கிறது. அங்கு இங்கிலாந்தை விட ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் சட்டங்கள் மிகவும் இலகுவாக உள்ளன.

பேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற பிற சமூக ஊடகங்களை போல ஸ்னப்சாட் செயலி அதே அளவிலான கவனத்தைப் பெறவில்லை என்றாலும், அது மிகவும் பிரபலமாக உள்ளது.
ஸ்னப்சாட் செயலி உலகம் முழுவதும் தினசரி 300 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளதோடு , 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 13-34 வயதுடையவர்களில் 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.