கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 36 வயது பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
வாழ வேண்டிய வயதில் இறந்து விட்ட அந்தப் பெண்ணுக்கு மரணச்சடங்கை நடத்த உறவினர்கள் துயரத்தின் மத்தியில் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
ரோஸா இஸபெல் செஸ்பெட் கல்லகா என்ற அந்தப் பெண்ணின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு நல்லடக்கத்திற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த சவப்பெட்டியின் மூடியை யாரோ உள்ளிருந்து பலமாகத் தட்டுவதைக் கேட்ட உறவினர்கள் திகைப்படைந்தனர்.
அவர்கள் அவசர அவசரமாக சவப்பெட்டிக் கதவைத் திறந்த போது அந்தப் பெண் கண்களை விழித்து உறவினர்களை நோக்கவும் அவர்கள் பேரதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இதனையடுத்து அவர்கள் அந்தப் பெண்ணை ஆட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் வண்டியொன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவருக்கு உயிர் காப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.
மேற்படி உபகரணங்கள் பொருத்தப்பட்ட பின்னர் அந்தப் பெண்ணின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்ட போதும். அவர் சில மணித்தியாலங்களில் அவரது உடல் நிலைமை மோசமடைந்த நிலையில் மரணத்தைத் தழுவியுள்ளார்.
ரோஸா இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் அவரது உறவினர்கள் கடும் சினமடைந்துள்ளனர்
ரோஸா விபத்துக்குள்ளான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெர்ரினாவ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவிக்கையில் ரோஸா கோமா நிலையொன்றுக்கு சென்றதை அவர் மரணமடைந்து விட்டதாக தவறாக கருதியிருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி கார் விபத்தில் ரோஸாவுடன் இருந்த அவரது மருமகன்மாரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல் நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ரோஸாவின் மரணச்சடங்கின் போது எடுக்கப்பட்ட காணொளிக் காட்சியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 26 திகதி இடம்பெற்ற மேற்படி மரணச்சடங்கு குறித்து இன்று செவ்வாய்க்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM