(எம்.மனோசித்ரா)
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மல்வத்து பீடத்தின் மகா நாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கருத்து வெளியிடுகையில்,
'நாட்டிலுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எம்மால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனைகளை சமர்ப்பிப்பதற்காகவே நாம் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தோம். நாடு பாரதூரமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
நாட்டை இந்த நெருக்கடிகளிலிருந்து மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நாம் சகல அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகள் இராஜதந்திரிகளைப் போன்று செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM