மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்-- கிழக்கு பல்கலை. துணைவேந்தர் 

Published By: Digital Desk 4

03 May, 2022 | 04:40 PM
image

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் கடந்த 20ஆம் திகதி அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளதுடன் சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கை நிறுவகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வி.கனகசிங்கம் தெரிவித்தார்.

May be an image of 11 people, people standing, tree and outdoors

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் இடம்பெற்று ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (02) திகதி துணைவேந்தர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் இடம்பெற்ற பகிடிவதை. வன்முறைகள், மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக விசாரணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆண்கள் விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உடைக்கப்பட்டமை இதனை உடைத்த மாணவர்கள் உடைக்கப்பட்ட தொiலைக்காட்சி பெட்டியின் பெறுமதி தொகையை சமமாக பிரித்துச் செலுத்துவதோடு குறிப்பிட்ட அந்த மாணவர்கள் தொடர்ந்து விடுதியில் தங்கியிருக்க தடைவிதிக்கப்பட்டது.

அத்துடன் பகிடிவதையினை ஊக்குவித்தமை மற்றும் துணையாக செயற்பட்டமை காரணமாக நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரின் வழிநடத்தலில் பகிடிவதை நடவடிக்கைகளுக்காக துணைபோகுமாறு முதலாம் ஆண்டு மாணவர்களை கட்டாயப்படுத்திய முதலாம் வருட மாணவர் மற்றும் நான்காம் வருட மாணவர் ஆகியோருக்கு 3 வார காலத்துக்கு நிர்வாகத்துக்குள் உள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அதேவேளை பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பாக நான்காம்  ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை என்ற பெயரில் முதலாம் ஆண்டு மாணவரை தாக்கியதன் காரணமாக நிர்வாகத்துக்குள் உள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த விடையங்கள் அறிந்த மாணவர் ஒன்றியம் ஓழுக்ககாற்று அறிவிக்கப்பட்ட 29-4-2022 அன்று மாணவர்களை ஒன்று திரட்டி மேற்படி ஒழுக்ககாற்றை வாபஸ் பெறுமாறும் குறிப்பிட்ட மாணவர்களை நிர்வாகத்துக்குள் அனுமதிக்குமாறும் நிபந்தனைகளை முன்வைத்து பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை அழைத்து துறைத்தலைவர்கள் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒன்றிய பொருளாளர் போன்ற குழுவினை உள்ளடக்கிய குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்த சமயம் காரியாலயத்துக்கு வெளியில் பகிடிவதைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் முதலாம் தர மாணவர்கள் சிலர் சிரேஸ்ட மாணவர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டனர்.

அதனை தடுக்க முற்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சீவரெத்தினம் நான்காம் வருட மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளானதோடு அவரது கையடக்க தொலைபேசியும் பறித்து உடைக்கப்பட்டது அதனை தொடர்ந்து பணிப்பாளர் விரிவுரையாளர்கள் உட்பட 10 பேரை இரவு 12 மணிவரை வெளியில் செல்லாதவாறு காரியாலயத்தில் வைத்து பூட்டியுள்ளனர்.

மாணவர்களால் இழைக்கப்பட்ட நீதிக்கு புறம்பான வன்முறையினை மூடிமறைத்து தங்களுக்கு அனுதாபத்தை தேடிக் கொள்வதற்காக விரிவுரையாளர் ஒருவரால் தாக்கப்பட்டதாக விரிவுரையாளரை தாக்கிய மாணவர்களே உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களுக்கு கூறியதுடன்  தங்களை வைத்தியசாலையிலும் அனுமதித்துக் கொண்டனர்.

இந்த விடையம் தொடர்பாக 1-5-2022 கல்விசார் அவைக்குழு மற்றும் முகாமைத்துவசபை என்பன நடந்தேறிய விரும்பத்தகாத  செயல்களை நுட்பமாக பரீசிலனை செய்து மாணவர்களின் வன்முறை நடைவடிக்கைகளை கண்டித்ததுடன் நிர்வாகத்தில் சுமூகமான சூழலையும் விரிவுரையாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு 3-5-2022 இன்று காலை எட்டு மணிக்குள் நிறுவகத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேறுவதோடு மறு அறிவித்தல் வரை அவர்கள் உட்பிரவேசிக்க முடியாது எனவும். பல்கலைக்கழக கல்விசார் உறுப்பினர்களை உள்ளடக்காத சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை அமைக்கப்படும், 

மேற்படி விசாரணைக்குழுவின் அறிக்கை ஒரு மாத காலத்துக்குள் முகாமைத்துவ சபைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும். விசாரணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தவறிழைத்தவர்களுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19
news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு ; கொழும்பு...

2025-03-16 17:40:18
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39