நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திடல் மைதான பெருநாள் தொழுகை, இரண்டு வருடங்களின் பின் மீண்டும் ஏறாவூரில் இன்று செவ்வாய்க்கிழமை 03.05.2022 இடம்பெற்றது.
அகில இலங்கை தௌஹீத் ஜமா அத்தினரால் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மைதானத் தொழுகைக்காகவென ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.
நிகழ்வில் அகில இலங்கை தௌஹீத் ஜமா அத் அமைப்பு ஏறாவூர் கிளையின் மௌலவி ஏ.ஆர்.எம். றிஸ்வான் எம்.ஏ. (ஷர்கி) பெருநாள் தொழுகையையும் பிரச்சாரத்தையும் நிகழ்த்தினார்.
கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக நோன்புப் பெருநாள் தினமான வெள்ளிக்கிழமையன்று 14.05.2021 பள்ளிவாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.
அதேவேளை வழமையாக பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படும் திடல்களும் மைதானங்களிலும் தொழுகை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM