குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு நிவாரண நிதியுதவி - அரசாங்கம்

Published By: Digital Desk 5

03 May, 2022 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

உலக வங்கியின் நிதியுதவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Semasinghe could become next Energy Minister – Udaya – The Island

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மே , ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களும் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. 

இவ்வாறு நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள தகுதியுடைய சுமார் 3.34 மில்லியன் குடும்பங்களை இனங்காண்பட்டுள்ளன.

இதற்காக மாதமொன்று 4455 மில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய 3 மாதங்களுக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கு 13 364 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் 2000 ரூபா வயோதிபக் கொடுப்பனவைப் பெறுவோருக்கு மேலதிகமாக 3000 ரூபா வழங்கப்படவுள்ளது.

100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான வழங்கப்படும் 5000 ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபா வழங்கப்படவுள்ளது.

முதியோர் கொடுப்பனவிற்காக விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். வலுவிழந்தோருக்கு வழங்கப்படும் 5000 ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபா வழங்கப்படவுள்ளது. 

இதனைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் 5000 ரூபா வழங்கப்படும்.

நீரிழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. இவர்களிலும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு 5000 ரூபா வழங்கப்படும்.

இதுவரையில் 1900 ரூபா, 3200 ரூபா, கொடுப்பனவுகளைப் பெறும் சமூர்த்தி பயனாளர்களுக்கு மேலதிகமாக 3100 ரூபாவும் , 4500 ரூபா கொடுப்பனவைப் பெறுபவர்களுக்கு மேலதிகமாக 3000 ரூபாவும் வழங்கப்படும்.

இதுவரையில் 732 000 குடும்பங்கள் சமூர்த்தி கொடுப்பனவை வழங்குமாறு கோரியுள்ளனர். 

இவர்களுக்கும் 3 மாதங்களுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி மற்றும் தொழிநுட்ப உதவியின் கீழ் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக 167 மில்லியன் டொலரைப் பயன்படுத்தி மேற்குறித்த பிரிவினருக்கு கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04