யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும்  (வயது 17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார். 

குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதனை அறிந்த அயலவர்கள் வீட்டில் பரவிய தீயினை அணைத்து , மாணவியை அங்கிருந்து மீட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

வைத்தியசாலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.