அட்சய திருதியில் தங்கம் வாங்கினால் மட்டும் தான் ஐஸ்வர்யம் பெருகுமா ?

Published By: Digital Desk 5

03 May, 2022 | 11:52 AM
image

குமார் சுகுணா

மிக பெரிய பொருளாதார பிரச்சினையில் நாடு சிக்கி தவிக்கின்ற இத் தருணத்திலும் தங்கம் வாங்குவதற்கு கடை தெருக்களில் இன்று நிறைந்திருப்பவர்கள் அதிகம்.

image.png

 தங்கம்  வாங்குவதற்கு மட்டுமே சிறந்த நாள் அட்சய திருதியை என நினைத்துக்கொண்டு தங்கம் வாங்குவதற்கு கடைகளில் இன்று காத்திருப்பவர்கள் பலர்.

 பணம் இல்லை என்றாலும் கூட கடன் வாங்கியாவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என நகைக்கடை தெருக்களில் காத்திருப்போர் அனேகம் என்பதனை இன்று நகை கடைத்தெருவுக்கு சென்று பார்த்தால் கண்டுக்கொள்ளலாம்.

 உண்மையில் அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்குவதற்கு மட்டுமே சிறந்த நாளா என பார்ப்போம்.

சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரக்கூடிய மூன்றாவது நாளான திருதியை திதியில் அட்சய திருதியை சுப நாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு 2022 மே 3ஆம் திகதியான இன்று  (சித்திரை 20) கொண்டாடப்படுகிறது.

புராணத்தின் படி பிரம்மனால் தோற்றுவிக்கப்பட்ட கிருதயுகத்தில் முதல் நாள் அட்சய திருதியை ஆகும்.

அள்ள அள்ளக் குறையாதது என்பது தான் அட்சயம். திருதியை அன்று எந்த நல்ல விஷயம் செய்தாலும் அது பல மடங்காகப் பெருகும்.

 ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அட்சய திருதியை அன்று அவசியமாக தங்கம் வாங்க வேண்டும், பொன்னும் பொருளும் அதிகமாக சேரும் என்ற பழக்கம் உருவாகியுள்ளது.

மகாலட்சுமி அருள் தரக்கூடிய அட்சய திருதியை எனும் அற்புத நாள் தற்போது தங்கத்தை விற்பனை செய்வதற்கான வர்த்தக நாளாக இந்த உலகம் மாற்றியுள்ளது.

அட்சய திருதியை நாளில் நாம் என்ன செய்கின்றோமோ அல்லது எதை வாங்குகின்றோமோ அதற்கு 100 மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 இந்த நாளில் செய்ய வேண்டிய அற்புத விஷயங்கள் எல்லாம் மறக்கடிக்கும் வகையில் அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கக்கூடிய நாள் என்ற மாயை உருவாகியுள்ளது.

 தங்கம் வாங்கினால் மட்டும் தான் ஐஸ்வர்யம் பெருகும் என்பது அல்ல.

 அட்சய திருதியை அன்று எந்த நல்ல விஷயங்களை செய்தாலும், அதாவது நமக்கான பொருளை வாங்குவதை விட மற்றவர்களுக்கு உதவி செய்வது, தானம் செய்வது ஆகியவை பல மடங்கு நன்மைகளை அளிக்கும்.

 அதாவது நமக்கான பொருளை வாங்குவதை விட மற்றவர்களுக்கு உதவி செய்வது, தானம் செய்வது ஆகியவை பல மடங்கு நன்மைகளை அளிக்கும்.

 அட்சய திருதியை புராணக் கதைகளும் எந்த பிரதிபலனும் எதிர்பாராத உதவி செய்திருப்பதை சுற்றியே அமைந்திருக்கும். 

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதை விட நீங்கள் தானம் செய்வது சிறந்தது.

ஒருவர் போதும் என சொல்லக்கூடிய ஒரே விஷயம், வயிறு நிறைய சாப்பிடும் போது தான். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் பலரும் உணவில்லாமல் கஸ்டப்பட்டு வருகின்றனர்.

 இந்த அக்‌ஷய திருதியை நாளில் உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வது நல்லது. வீட்டிலேயே அன்னதானம் செய்யலாம். 

image.png

இல்லையெனில் வீட்டில் உணவு தயாரித்து அதை பொட்டலங்களாகப்  ஏழை, எளியோர், ஆதரவற்றவர்களுக்கு வழங்கலாம்.

வறுமையில் வாடும் பலருக்கும் ஒரு வேளை உணவு கூட கனவாக இருக்கிறது.  உங்களால் இயன்ற அளவு அன்னதானம் வழங்கலாம்.

 வீட்டில் உணவு தயாரித்து கொடுக்கலாம் அல்லது சமைக்கும் பொருட்களாக கொடுக்கலாம். 

அட்சய திருதியை என்று வயிறு நிறைய சுவையான உணவை அளிக்கும் போது,  உங்கள் வீட்டில் என்றென்றும் செல்வம் நிலைத்திருக்க உதவும்.

மங்கலப் பொருளான குங்குமம் மற்றும் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை அட்சய திரிதியை அன்று தானம் செய்வது, சுபிட்சத்தை ஏற்படுத்தும். 

கோவிலில் அல்லது பெண்களுக்கு வெற்றிலை பாக்கில் குங்குமம் மற்றும் சந்தானம் வழங்கலாம். 

குங்குமம் வழங்குவது சுக்கிரனின் அம்சம் என்பதால், வீட்டில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். 

சந்தனம் குளிர வைக்கும் தன்மைக் கொண்டதால், மன நிம்மதி மற்றும் மன அமைதி உண்டாகும். இதனால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

வஸ்திர தானம் என்று கூறப்படும் ஆடைகள் வாங்கி தரலாம்

பொதுவாகவே, சில விசேஷங்களுக்கு உறவுப் பெண்கள், அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியவர்களுக்கு இயன்ற வகையில் ஆடைகளை வழங்கி ஆசீர்வாதம் பெறுவது வழக்கம். அதை அட்சய திருதியை அன்று செய்யலாம்.

கல்வி கற்பவர்களுக்கு புத்தகங்கள், பேனை, பென்சில்கள்  கொப்பிகள் உள்ளிட்ட கல்வி கற்பதற்கு தேவையான உபகரணங்களை  வாங்கிக்கொடுக்கலாம். 

புத்தகங்கள் ஒருவரின் அறிவை விசாலமாக்கக்கூடிய அற்புத பொருள். 

சிந்தனையை தூண்டி, யோசிக்க வைக்கக்கூடிய புத்தகங்களை நாம் நம் இளைய தலைமுறையினருக்கு தானமாக வழங்கலாம்.

அட்சய திருதியை அன்று எதுவுமே வாங்குவதற்கு வசதியில்லை என்பவர்கள் வட மகாலட்சுமியின் அம்சங்களான மஞ்சல்,  உப்பு போன்ற மங்கள பொருட்களையும் வாங்கலாம். 

மற்றவர்களுக்கும் வழங்கலாம். தானியங்களையும் வாங்கலாம். 

நம்மால் முடிந்தவற்றை அன்போடும்  மனநிறைவோடும் மற்றவர்களுக்கு வழங்கி அட்சய திருதியை கொண்டாடுவோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00