ரம்புக்கனை  ஆர்ப்பாட்டம் மீதான   துப்பாக்கிப் பிரயோகம் :  நான்கு துப்பாக்கிகள் அரச  இரசாயன பகுப்பாய்வுக்கு

Published By: Digital Desk 4

02 May, 2022 | 02:02 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில்,  துப்பாக்கிச் சூடு  நடாத்த  பயன்படுத்தப்பட்ட நான்கு துப்பாக்கிகளை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ரம்புக்கனை ஆர்ப்பாட்ட துப்பாக்கி சூடு -:கைதான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

கடந்த 19 ஆம் திகதி, எரிபொருள் கோரி ரம்புக்கனை பிரதேச மக்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், அன்றைய தினம் மாலை பொலிசாரால் பலப் பிரயோகம் செய்து கலைக்கப்பட்டது. இதன்போது கண்ணீர் புகை தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியனவும் பதிவாகின.

 ரீ 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுடப்பட்டிருந்தமை பின்னர் முன்னெடுத்த நீதிவான்  நீதிமன்ற பரிசோதனைகளின் போதான சாட்சிப் பதிவில் தெரியவந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 42 வயதான சாமிந்த லக்ஷான்  என்பவர் கொல்லப்பட்டிருந்தார். லக்ஷான் மீது துப்பாகிச் சூடு நடாத்த பயன்படுத்திய துப்பாக்கியை துள்ளியமாக அடையாளம் காண இந்த அரச இரசாயன பகுப்பாய்வினை முன்னெடுக்க விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.

 அத்துடன் ஏற்கனவே கேகாலை நீதிவானின் அனுமதி பெறப்பட்ட, சம்பவம் தொடர்பிலான சி.சி.ரி.வி. கானொளிகளின் பதிவுகள் இன்னும் இரு நட்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் கையளிக்கப்படும் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

 இந்த சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்னவும்,  கேகாலை வலய குற்றத் தடுப்புப் பிரிவின் 3 பொலிஸ்  கான்ஸ்டபிள்களும் இதுவரைக் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45