( எஸ்.என்.நிபோஜன் )

கிளிநொச்சி, பளை பிரதேச செயலக பிாிவில் கிளாலி பிரதேசத்தல் நேற்று ஞாயிற்றுகிழமை மதியம் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றொருவா் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குறித்த சம்பவத்தில் அறத்திநகா் அல்லிப்பளையைச் சோ்ந்த 34 வயதுடைய எட்டுப் பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா ராசா என்வா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

மேலும் கச்சாா்வெளி பளையைச் சோ்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பாலசுப்பிரமணியம் பகீரதன் என்பவா் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றாா்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கிளாலி பிரதேசத்தில் வெடிபொருள் அகற்றப்படாத பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தினை தொடா்ந்து இறந்தவரின் உறவினா்கள் பளை  பொலிஸ் நிலையத்தில்  பிற்பகல் மூன்று மணிக்கு முறைப்பாடு செய்தபோதும் பொலிஸாா் மாலை 6.15 மணிக்கே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.