இடதுசாரி கட்சிகளின் மேதின கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில்

Published By: Digital Desk 4

01 May, 2022 | 09:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசாங்கத்துக்கு இடமளிக்கவேண்டும் எனும் பிரதான கோரிக்கையுடன் இடதுசாரி கட்சிகளின் மேதின கூட்டம் இன்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.

...

இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, மக்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து இன்று மேதினத்தை கொண்டாடின. மேதின பிரதான நிகழ்வாக பிற்பகல் 2மணியளவில் கொழும்பு கொம்பனி தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர பண்டபம், டாலி வீதி ஊடாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தை மாலை 3மணியளவில் வந்தடைந்தனர்.

அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள்

கொம்பனி வீதியில் இருந்து ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை காட்சிப்படுத்திக்கொண்டும் பதாதைகளை ஏந்தியவண்ணமும் போராட்டக் கோஷங்களை எழுப்பிக்கொண்டு வந்ததை காணமுடியுமாக இருந்தது. குறிப்பாக மக்களின் கோரிக்கைக்கு செவசாய்த்து அரசாங்கம் பதவி விலகவேண்டும். பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசாங்கத்துக்கு இடமளிக்கவேண்டும்.

...

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் இல்லாவிட்டால் முடியுமானவர்களுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்கவேண்டும். அரசாங்கமே தொடர்ந்தும் மக்கள் மீது சுமைகளை சுமத்தாதே போன்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர்.

இடைக்கால அரசாங்கத்தை உடனடியாக அமைக்கவும்

அத்துடன் இடதுசாரி கட்சிகளின் இம்முறை மேதின கூட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது, நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தற்போதைய அரசாங்கத்துக்கு முடியாது. அதனால் பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு கணமுடியுமான நிலை ஏற்பட்ட பின்னர் ஒரு வருடத்துக்குள் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதகும்.

...

3மணி அளவில் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொம்பன வீதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்லத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்கள் மாலை 3 மணியளவில் பிரதான மேடை அமைக்கப்பட்டிருந்த கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தை வந்ததடைந்தனர். பிரதான மேடையில் கட்சித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, வீரசுமன வீரசிங்க, அசங்க நவரத்ன ஆகியோர் மற்றும்  தொழிற்சங்க தலைவர்களும் இதன்போது  உரையாற்றினர். நிகழ்வுகள் அனைத்தும் மாலை 4மணியளவில் நிறைவடைந்தன.

...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால...

2025-04-24 12:57:35
news-image

வானில் நாளை அரிய காட்சி தென்படும்

2025-04-24 13:00:06
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31