அரசியல்வாதிகளும், அரசியலமைப்பும் அவசியமில்லை : அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம் - பாகொட ஜன்தவங்ஷ தேரர் 

By T Yuwaraj

01 May, 2022 | 04:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள போது அரசியல்வாதிகள் அரசியலமைப்பின் ஊடாக அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்களாயின் அவர்களும் பிரயோசனமற்றவர்களாகி , அரசியலமைப்பும் பிரயோசனமற்றதாகிவிடும்.

எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டில் ஒவ்வொரு சந்தியிலும் அரசியமைப்பை தீயிட்டு கொளுத்துவோம் என பாகொட ஜன்தவங்ஷ தேரர் தெரிவித்தார்.

முதியோர் இல்லம் ஒன்றில் பௌத்த பிக்கு அடித்துக் கொலை!

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மகாசங்கத்தினருக்குமிடையில் ஞாயிற்றுக்கிழமை (1) மாலை கொழும்பில் உள்ள இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய கீதம் இசைக்கப்படும் போது மரியாதை செலுத்தி எழுந்து நிற்கிறோம். மயக்கமடைந்து விழுந்த பிறகு மரியாதை செலுத்த முடியாத நிலைமை ஏற்படும். நாடு பல்துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. 

மருந்து மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் இல்லாமல் பொது மக்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் போது  அரசியலமைப்பின் அடிப்படையில் அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என மக்கள் பிரதிநிதிகள் கருதுவார்களாயின், மக்கள் பிரதிதிகளும் அவசியமில்லை, அரசியலமைப்பும் அவசியமில்லை.

அரசியல்வாதிகள் அரசியமைப்பில் இருந்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பார்களாயின் அரசியலமைப்பை நாட்டில் ஒவ்வொரு சந்தியிலும் தீயிட்டு கொளுத்துவோம். மக்களின் நலனுக்காகவே அனைத்தும் உள்ளன. 

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் மதிப்பளிக்க வேண்டும். அத்துடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிளும் இடைக்கால அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

பொதுத்தேர்தல் ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என ஒருசில அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை ஏற்றுக்கொள்ள கூடியது. பொதுத்தேர்தலை நடத்தும் சூழல் நாட்டில் தற்போது கிடையாது. இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38