கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

By T Yuwaraj

01 May, 2022 | 12:40 PM
image

கண்டி - ரங்கல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் மீகொடை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி  மீகொடை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்தநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 24 வயதான ஓவிட்டிகம யட்டபாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right