மிகவும் பலம் வாய்ந்த றோயல் செலஞ்சர்ஸை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது குஜராத் டைட்டன்ஸ் 

30 Apr, 2022 | 09:15 PM
image

(என்.வீ.ஏ.)

மிகவும் பலம் வாய்ந்த றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

David Miller and Rahul Tewatia were at it again guiding the chase for Titans, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 30, 2022

சற்று கடினமான, ஆனால் எட்டக்கூடிய 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

Rahul Tewatia flexes his biceps, and rightly so, after guiding Titans to another clinical chase, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 30, 2022

ராகுல் தெவாட்டியாவும் டேவிட் மில்லரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5 ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜராத் 8ஆவது வெற்றியை பெற உதவினர்.

David Miller lines up to thump one down the ground, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 30, 2022

இந்த வெற்றியுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ள குஜராத், பிளே ஓவ் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது

ஆரம்ப வீரர்களான ரிதிமான் சஹா (29), ஷுப்மான் கில் (31) ஆகிய இருவரும் 51 ஓட்டங்களைப் பிகிர்ந்திருந்தபோது சஹாவின் விக்கெட்டை வனிந்து ஹசரங்க டி சில்வா கைப்பற்றினார்.

Wanindu Hasaranga drew first blood for RCB getting rid of Wriddhiman Saha for 29, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 30, 2022

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 17 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷுப்மான் கில்லை ஆட்டமிழக்கச் செய்த ஷாபாஸ் அஹ்மத், 10 ஓட்டங்கள் கழித்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவின் (3) விக்கெட்டையும் கைப்பற்றினார்.

Shahbaz Ahmed sent back Shubman Gill and Hardik Pandya in quick succession to tilt the scales back in RCB's favour, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 30, 2022

மொத்த எண்ணிக்கை 95 ஓட்டங்களாக இருந்தபோது வனிந்து ஹசரங்க டி சில்வாவின் பந்துவீச்சில் சாய் சுதர்சன் (20) வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் ராகுல் தெவாட்டியாவும் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து பின்னர் அதிரடியில் இறங்கி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

Wriddhiman Saha and Shubman Gill got Gujarat Titans off to a solid start, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 30, 2022

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைக் குவித்தது.

An eight-ball 16 from Mahipal Lomror pushed Royal Challengers' score to 170, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Mumbai, April 30, 2022

மொத்த எண்ணிக்கை 11 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் 2ஆவது ஓவரில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தபோதிலும் முன்னாள் தலைவர் விராத் கோஹ்லியும ரஜாத் பட்டிதாரும் மிக அருமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலப்படுத்தினர்.

Glenn Maxwell played a brief but an effective innings of 33 off 18 balls, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Mumbai, April 30, 2022

அவர்கள் இருவரும் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

ரஜாத் பட்டிதார் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ப்ரதீப் சங்வானின் பந்துவீச்சிலும் விராத் கோஹ்லி 58 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மொஹமத் ஷமியின் பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

Virat Kohli looked in control but struggled to shift gears, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 30, 2022

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 3ஆவது தொடர்ச்சியான முறையாக பிரகாசிக்கத் தவறி 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Rajat Patidar had an attacking intent from the moment he walked in, Gujarat Titans vs Royal Challengers Bangalore, IPL 2022, Mumbai, April 30, 2022

க்ளென் மெக்ஸ்வெல் (33), மஹிபல் லொம்ரோர் (16) ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தி அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். ஷாபாஸ் அஹ்மத் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ப்ரதீப் சங்வான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35