பெண்ணொருவரின் புகைப்படத்தை அவரது விருப்பமின்றி மாற்றி, இணையத்தில் வெளியிட்டமை - அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்துகொண்டமைக்காக சமீபத்தில் மகியங்கனை நீதிமன்றம் நபர் ஒருவருக்கு 18 மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.
நவீன உலகில் அனைவரினதும் கரங்களில் கையடக்க தொலைப்பேசிகள் காணப்படுகின்ற சூழலில் அனேகமானவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு படங்கள், வீடியோக்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது பரஸ்பர சம்மதம் மற்றும் ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலான செயற்பாடு.
ஆனால், உறவுகளில் கசப்பு ஏற்படும்போது - சூழ்நிலைகள் மாறும்போது இது ஆபத்தான நடவடிக்கையாக மாறுகின்றது. குறிப்பாக, பெண்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் தங்களின் அந்தரங்க புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை (மாற்றம் செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்...) வெளியிடுவதால் சொல்ல முடியாத பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இது, பாதிக்கப்படுபவர் கடும் மன உளைச்சல்,தொடர்ந்தும் பாலியல் தொந்தரவு, மிரட்டப்படுதல், சில வேளைகளில் தற்கொலை போன்றவற்றை எதிர்கொள்ளவேண்டிய நிலையை உருவாக்குகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மகியங்கனை நீதவான் வழங்கியுள்ள தீர்ப்பு இலங்கை பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
கிசானி (பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது பாடசாலை கால காதலனுடனான உறவு பாதிக்கப்பட்டு முறிவடைந்தவேளை மேலே தெரிவிக்கப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்டார்.
காதல் முறிவடைந்து சில மாதங்களின் பின்னர் தனது புகைப்படங்கள் மாற்றப்பட்டு ஆபாசமான விதத்தில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளதை அவர் அவதானித்தார்.
அவ்வேளை அதனை தடுத்து நிறுத்துவதற்காக என்ன செய்வது என்பது தெரியாத நிலையில் அவர் காணப்பட்டார்.
அவருக்கு அப்போது 22 வயது மாத்திரமே. அவர் தனது துயரங்கள், வேதனைகளை மௌனமாக சுமந்தபடி வாழத் தொடங்கினார். பின்னர் அவர் தனது நண்பர்களின் உதவியுடன் முகநூலுக்கு இது குறித்து அறிவித்து, அந்த படங்களை அகற்றினார்.
2020இல் அவர் தாதியாக கடமையாற்றிக்கொண்டிருந்தார். கொவிட் காலத்தில் அவர் ஆற்றிய பணிக்காக மருத்துவ சுகாதார துறையினர் அவரை கௌரவித்தனர்.
அவ்வேளை பழைய படங்கள் மீண்டும் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியாக தொடங்கின.
இதன் காரணமாக பல நாட்களை கண்ணீருடனும் உணர்வற்ற நிலையிலும் கழித்த பின்னர், அவர் சட்ட அமுலாக்கல் பிரிவினரின் உதவியை நாட தீர்மானித்தார்.
அவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டார்.
"பொலிஸார் சந்தேக நபரை விசாரணைக்கு அழைத்தவேளை அவர் பொய்யான தகவல்களை வழங்கி தப்பினார். அதன் பின்னர் தான் நீதித்துறையின் உதவியை நான் நாட தீர்மானித்தேன்.
நான் அதற்கு காரணமானவர் என சந்தேகிக்கும் நபருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல தீர்மானித்தேன். நான் போதுமான துயரங்களை அனுபவித்துவிட்டேன். குடும்பத்தினர் இந்த விடயத்தினால் என்னை வெறுத்தனர்.
அம்மாவும் சகோதரர்களும் சில காலம் என்னுடன் பேசவில்லை. ஆனால், எனக்கு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர்.
அவர்கள் என்னை நீதித்துறையின் உதவியை நாடுமாறு உற்சாகப்படுத்தினார்கள்" என தெரிவிக்கின்றார்.
அதன் பின்னர் அவர் பிரியந்த ஜயக்கொடி என்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை தொடர்புகொண்டார். அவர் கிசானியை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தர்சிகாவை தொடர்புகொள்ளுமாறு கூறினார். தர்சிகாவின் ஆலோசனையின் பேரில் கிசானி சைபர் குற்றப்பிரிவிடம் முறைப்பாடு செய்தார்.
அதன் பின்னர் சைபர் குற்றப்பிரிவினர் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்கள் முகநூல் நிறுவனத்தின் உதவியை நாடினார்கள். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதவியையும் நாடினார்கள். அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
சமூகத்தில் இடம்பெறும் குற்றங்களை துணிந்து முறைப்பாடு செய்கையில், சில சந்தர்ப்பங்களில் நீதி அதன் அகலக்கண்களை திறக்கிறது.
- காஸ்ட்ரோ
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM