(எஸ்.ஜே.பிரசாத்)
பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் பின்னர் இலங்கையில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் அணியில் திமுத் கருணாரத்ன மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், திமுத் கருணாரத்ன மீண்டும் ஒருநாள் அணிக்கு தலைவராக பதவியேற்க வேண்டுமானால், முதலில் ஒருநாள் அணியில் அவரது இடத்தை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2019 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு தலைவரகா இருந்த திமுத் கருணாரத்ன 34 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
2019ஆம் ஆண்டு இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவி நெருக்கடியில் இருந்தபோது, தற்காலிகமாக ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியை தலைமைத் தாங்கப்போவது யார் என்ற விவாதத்தின் போது திமுத் மீண்டும் கவனத்தை ஈர்த்தார். எவ்வாறாயினும், அவர் முதலில் ஒருநாள் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது.